Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அடுக்குமாடி குடியிருப்பு அமைத்து தரவேண்டும்” கட்சி நிர்வாகிகள் போராட்டம்….. விழுப்புரத்தில் பரபரப்பு…!!

இந்திய குடியரசு கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் இருவேல்பட்டு குமார் தலைமையில் இந்திய குடியரசுக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் இந்திரா நகர் காலனி, வழுதரெட்டி காலனி, விழுப்புரம் பெரிய காலனி பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் ஏழை, எளிய  மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் அமைத்து தர வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் பாலமுருகன், நகர கௌரவ தலைவர் சேவகன், செயலாளர் சரண்ராஜ், ஓவியரணி நிர்வாகி கிறிஸ்டோ, செயற்குழு உறுப்பினர் மார்த்தாண்டன்,  மாநில பொருளாளர் கௌரி சங்கர், மாநில பொதுச் செயலாளர்கள் பிரபு, மங்காபிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாவட்ட துணை தலைவர் கணேசன், மாவட்ட பொறுப்புக் குழு நிர்வாகி தியாகராஜன், ஒன்றிய தலைவர் ராஜன், மாவட்ட தலைவர் மனமோகனதாசன், மாவட்ட பொருளாளர்கள் முருகன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாத விதமாக அமைதியான முறையில் நடைபெற்றது.

Categories

Tech |