பெண் டாக்டர் குடும்ப பிரச்சனை காரணமாக விஷ ஊசி போட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
சென்னையில் உள்ள கே.கே நகர் அருணாச்சலம் தெருவில் லோகித் சாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி ராயலட்சுமி(27) கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையில் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக ராயலட்சுமி கடந்த சில நாட்களாவே மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை படுக்கை அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டி கொண்டு வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த லோகித் சாய் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராயலட்சுமி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவர் பக்கத்தில் மாரடைப்பை ஏற்படுத்தும் விஷ ஊசி இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் ஊசி போட்டு தற்கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரோகித் சாய், ராய லட்சுமி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ராய லட்சுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கே.கே நகர் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.