மேய்ச்சலுக்கு சென்ற 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படடுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் பாண்டியராஜன் ஆடுகளை அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு மேச்சலுக்கான அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து தகவலறிந்த கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ராஜ ராஜேஸ்வரி, மாவட்ட கால்நடை நோய் தடுப்பு புலனாய்வு உதவி இயக்குனர் ரமேஷ், உள்ளிட்ட பலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த ஆடுகளின் உடல் பாகங்களை சேகரித்து சென்னையில் உள்ள கால்நடை துறை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து அதே பகுதியில் முகாம் நடத்தப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து, நோய் எதிர்ப்பு மருந்து, ஊட்டச்சத்து மருந்து, உள்ளிட்ட மருந்துகள் செலுத்தப்பட்டது. மேலும் 2 நாட்களுக்கு ஒருமுறை ஆடுகள் பரிசோதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.