திருவேற்காடு நகராட்சியில் நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் நகராட்சி தலைவராக தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் களை தேர்ந்தெடுக்கும் விதமாக மறைமுக தேர்தல் எல்லா நகராட்சி அலுவலகங்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 10 மணி அளவில் நடைபெற்றது.இதேபோல் திருவேற்காடு நகராட்சியில் தேர்தல் நடத்தும் அதிகாரி ரமேஷ் தலைமையில் மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க-11,காங்கிரஸ் -1, சுயேச்சைகள்- 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் போட்டி இல்லாமல் நகராட்சி தலைவராக திமுக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் ஒதுக்கப்பட்டு காங்கிரஸ் கட்சி கவுன்சிலர் ஆனந்தி ரமேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.