Categories
உலக செய்திகள்

இந்திய மாணவர்கள் எல்லையை கடக்க பேருந்து வசதி…. இந்திய தூதரகம் அதிரடி….!!!

ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைன் சென்றுள்ளனர். மேலும் தலைநகர் கீவ் நகரில் சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் இப்போரின் சூழலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் கடந்த 9 நாட்களாக நடைபெற்ற இந்தப் போரானது இன்று  காலை 11:30 மணியிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யா வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய தூதரகம்,  உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அவர்களை அங்கு உள்ள ரயில்கள் மற்றும்  விமானங்கள் மூலம் இந்தியா வர உதவி செய்துள்ளது. இந்நிலையில் தற்போது உக்ரைன் கார்கிவில் உள்ள 298 இந்திய மாணவர்களை எல்லையை விட்டு வெளியேற்ற இந்திய தூதரகம் பேருந்து வசதியை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |