தி.மு.க பெண் கவுன்சிலர் நகராட்சியின் முதல் தலைவர் என்ற பெருமையுடன் பதவியேற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கொல்லங்கோடு பகுதியில் நகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தப் பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் தே.மு.தி.க-1, அ.தி.மு.க-1, பா.ஜ.க-5, காங்கிரஸ்-6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-10, தி.மு.க-10 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடைபெற்ற நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த தேர்தலில் தலைவர் போட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் தலைவராக தி.மு.க கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலரை எதிர்த்து தி.மு.க மற்றும் பா.ஜ.க கட்சியின் கவுன்சிலர்களும் போட்டியிட்டனர். இதனால் கட்சி நிர்வாகிகளிடம் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க கவுன்சிலர் ராணி வெற்றி பெற்றார். அதன்பிறகு நடைபெற்ற துணைத்தலைவர் போட்டியில் காங்கிரஸ் கவுன்சிலர் பேபி என்பவர் வெற்றி பெற்றார். இவர்கள் இருவருக்கும் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.