Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“காணாமல் போன கவுன்சிலர்கள்” அதிர்ந்து போன கழகம்…. இறுதியில் ஒத்திவைப்பு…!!

போதுமான‌ அளவு கவுன்சிலர்கள் வராததால் பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மயிலம் பகுதியில்‌ 15-வார்டுகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுயேட்சை-3, அ.தி.மு.க-4, திமுக- 2, பா.ஜ.க-5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த பகுதியில் தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெறவிருந்தது. இந்தத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, பாஜக என 3 கட்சிகளும் போட்டியிட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு ஆதரவாக கவுன்சிலர்களை திரட்டியுள்ளனர். அப்போது சுயேச்சை கவுன்சிலர் சிவசங்கர் என்பவரை அ.தி.மு.க வினர் கடத்தி சென்றதாக ஒரு தகவல்வந்தது.

இதுகுறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அ.தி.மு.க நிர்வாகிகள்  சிலரை கைது செய்தனர். ஆனால் சிவசங்கர் தன்னை யாரும் கடத்தவில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன்பிறகு அ.தி.மு.க நிர்வாகிகளை காவல்துறையினர் விடுதலை செய்தனர். மேலும் நடைபெற்ற தலைவர் மற்றும் துணைத்தலைவர் போட்டியில் கவுன்சிலர்கள் 7 பேர் மட்டுமே வந்தனர். மீதமுள்ள 11 கவுன்சிலர்கள் வராததால் அந்தப் பகுதியில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

Categories

Tech |