கடந்த வாரம் உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா 10-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. இந்தப் போர் காரணமாக ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளிலும் உயிரிழப்புகள் அதிகம் நேர்ந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை முற்பகல் 10.00 (உள்ளூர் நேரம்) முதல் நிறுத்தி வைப்பதாக ரஷ்யா அறிவித்தது.
இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போரைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. உரத்துக்கு மூலப்பொருளான பொட்டாஷை ரஷ்யாவிடம் இருந்து தான் இந்தியா இறக்குமதி செய்கிறது. இதனால் பொட்டாஷ் இறக்குமதி செலவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பொட்டாஷ் விலை உயரும்போது இந்தியாவில் உரத்தின் விலையும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.