Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

கொடியை அகற்றியது ஏன்?…. பா.ஜ.க.வினர் சார்பில் நடைபெற்ற போராட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

கட்சி கொடியை  அகற்றியதை  கண்டித்து பா.ஜ.க .வினர்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேரூரில்  பா.ஜ.க.வினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது பா.ஜ.க. ஒன்றிய தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சிங்கம்பூண்டி கிராமத்தில் பா.ஜ.க. கொடியை அகற்றியதை கண்டித்தும், அந்த  மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் மாவட்ட தலைவர் வெங்கடேசன், எஸ்.சி எஸ்.டி பிரிவு நிர்வாகி திருமலை, கிராம கிளை அலுவலக நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி, சங்கர், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் தமிழ்செல்வி, மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி, ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் நித்தியானந்தம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |