Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மேயர் மற்றும் துணை மேயர்” 18 பேரூராட்சிகளில் வெற்றி…. அசத்திய தி.மு.க…!!

தி.மு.க கட்சி  18 பேரூராட்சிகளில் வெற்றி பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மயிலம் பகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இது தவிர மீதமுள்ள 50 பேரூராட்சிகளிலும் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 18 இடங்களில் தி.மு.க வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அகத்தீஸ்வரம் பகுதியில் தலைவராக திமுகவைச் சேர்ந்த அன்பரசி என்பவரும், துணைத் தலைவராக அ.தி.மு.க வைச் சேர்ந்த சரோஜா என்பவரும் வெற்றி பெற்றனர். இதன்பிறகு அழகாபுரம் பேரூராட்சியில் தலைவராக காங்கிரஸ் கட்சியின் அனிற்றா ஜெரால்ட் என்பவரும் துணைத் தலைவராக பிரான்சிஸ் ஞான ஆண்ட்ரூஸ் மணி என்பவரும் வெற்றி பெற்றனர். அஞ்சுகிராமம் பகுதியில் தி.மு.க வைச் சேர்ந்த ஜானகி என்பவரும் துணை தலைவராக காந்திராஜும் வெற்றி பெற்றனர்.

ஆரல்வாய்மொழி பகுதியில் சுயேச்சை வேட்பாளர் முத்துக்குமார் என்பவர் தலைவராகவும் அ.தி.மு.க வைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் துணைத் தலைவராகவும் வெற்றி பெற்றனர். மேலும் அருமனை பகுதியில் தலைவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேரி துணைத் தலைவர் தி.மு.க வை சேர்ந்த  சுலோச்சனா என்பவரும், ஆற்றூர் பகுதியில்  தலைவர் தி.மு.க வைச் சேர்ந்த பீனா துணை த் தலைவர் தங்கவேல் என்பவரும், அழகியபாண்டியபுரம் தலைவர் தி.மு.க ஜெயசீலா துணைத் தலைவர் சகாய ஷீலா என்பவரும், பூதப்பாண்டி தலைவர் தி.மு.க ஆலிவர் தாஸ் துணைத்தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அணில் குமார் என்பவரும் வெற்றி பெற்றுள்ளனர். இது தவிர மற்ற பேரூராட்சிகளிலும் தலைவர் மற்றும் துணைத் தலைவர் சிறப்பாக நடைபெற்றது.

Categories

Tech |