சசிகலா பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தென்மாவட்டங்களில் ஆன்மீக சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது திருச்செந்தூர் சென்று சசிகலா அங்கு ரயில் நிலையம் எதிரே உள்ள விடுதியில் தங்கி உள்ளார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவின் வந்துள்ளார். அவர் சசிகலா தங்கியிருந்த அறைக்கு எதிரே உள்ள அறையில் தங்கினார். பின்னர் தனது அறையிலிருந்து வெளியே வந்து சசிகலா ராஜாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கட்சிக் கொள்கைக்கு எதிராக செயல்பட்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுபற்றி ஓ.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் அதிமுகவுக்கு சசிகலா தலைமை தேவை. எனது விருப்பப்படியே சசிகலாவை சந்தித்தேன்.
நான் சசிகலாவை சந்தித்தது பன்னீர்செல்வத்திற்கு தெரியாது எனவும், அதிமுகவில் சசிகலா தலைமை ஏற்கவேண்டும் என நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தேன் எனவும் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்பதே சசிகலாவின் விருப்பமாகும். உள்ளாட்சி தேர்தல் தோல்விக்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தான் காரணம். கட்சியிலிருந்து என்னை நீக்கியது செல்லாது எனவும் தற்போதைய நிலை நீடித்தால் கட்சி ஒன்றுமில்லாமல் போய்விடும் எனவும் கூறியுள்ளார்.