15 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை பகுதியில் ரவிசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரானிக் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த மாதம் பிப்ரவரி 27-ஆம் தேதி ரவிசங்கர் குடும்பத்துடன் உறவினரின் துக்க வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக பழக்கடை வைத்திருப்பவர் செல்போன் மூலம் ரவிசங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி ரவிசங்கர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ரவிசங்கர் உடுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.