Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அய்யா அவதரித்த நாள்…. நடைபெற்ற மகா ஊர்வலம்… தரிசனம் செய்த பக்தர்கள்….!!

அய்யா  பிறந்த நாளை முன்னிட்டு மகா  ஊர்வலம் நடைபெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாகைகுளம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வாகைபதி அய்யா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் அய்யா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று  அய்யா  பிறந்த நாளை முன்னிட்டு அம்பை கிருஷ்ணன் கோவிலில் இருந்து  வாகைபதி வரை ஊர்வலம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடக்கி வைத்துள்ளார்.  இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த  அய்யா பக்தர்கள் சப்பரத்தை  தோளில் சுமந்து ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |