தி.மு.க வேட்பாளர் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற பெருமையுடன் பதவியேற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பேரூராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ஆம் தேதி முடிவடைந்தது. இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள 52 வார்டுகளில் சுயேச்சை-2 ,அதிமுக-7, பாஜக-11, திமுக கூட்டணி 34 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கவுன்சிலராக பதவி ஏற்பு விழா முடிவடைந்த நிலையில் தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.
இந்த தேர்தலில் தி.மு.க வேட்பாளர் வக்கீல் மகேஷ் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவருக்கு மாநகராட்சி ஆணையர் வெள்ளி செங்கோல் வழங்கியும் சால்வை அணிவித்தும் வாழ்த்து கூறினார். அதன் பிறகு துணை மேயராக தி.மு.க வேட்பாளர் மேரி பிரின்சி லதா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர்கள் இருவருக்கும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் தலைமையில் பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.