குடிக்க பணம் தராததால் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவிக நகரை அடுத்த பாடிகலைவாணர் தெருவை சேர்ந்தவர் கண்ணாத்தாள். இவரது கணவர் பாக்கியநாதன் சரிவர வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்வதால், அதே பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதி ஒன்றில் பணிபுரிந்து வரும் கண்ணாத்தாள் தான் குடும்ப செலவுகள் அனைத்தையும் முழுமையாக பார்த்துக் கொள்வார்.
இந்நிலையில் பாக்கியநாதன் அவ்வப்போது குடிக்க பணம் கேட்டு கண்ணாத்தாள் உடன் சண்டை இடுவது வழக்கம். எப்பொழுதும் வீட்டில் ஏற்படும் சண்டையிடும் பாக்கியநாதன் நேற்று கண்ணாத்தாள் வேலை செய்யும் இடத்திற்கு சென்று குடிக்க பணம் தருமாறு தகராறு செய்துள்ளார். கண்ணாத்தாள் பணம் தர மறுக்கவே இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போதையில் சரமாரியாக தனது மனைவியை குதித்து தப்பி ஓடியுள்ளார்.
இதில் இடுப்பு மார்பு கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்ட கண்ணாத்தாளை அங்குள்ளோர் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்பொழுது அங்கு சிகிச்சை நடைபெறும் வேளையில் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் தப்பி ஓடிய பாக்கியநாதன் தேடி வருகின்றனர்.