உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை கட்டடித்து விட்டதாக கூறியுள்ளார்.
நடிகர் பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் இயக்குகின்றார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கின்றார். மேலும் இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கின்றது. இதை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகின்றது.
இத்திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதாவது, “படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கின்றது. மாரி செல்வராஜ் இயக்கும் நான் நடிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் பூஜையானது இன்று நடைபெறுகின்றது. ஆனால் அதை கட்டடித்துவிட்டு நான் இங்கு வந்துள்ளேன். இத்திரைப்படமானது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ராதே ஷ்யாம் திரைப்படத்தை மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்போவதாக உதயநிதி ஸ்டாலின்” கூறியுள்ளார்.