சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மற்றும் அவரை நேரில் சந்தித்து அவர்களை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சி தலைமை கட்சியை விட்டு நீக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து 30 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை ஓ.பன்னிர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து பிறப்பித்துள்ளனர்.
அதிமுகவிற்கு சசிகலா ஆதரவு எதிர்ப்பு என இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றது. தென் மாவட்ட அதிமுகவை சேர்ந்தவர் சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும்.அமமுகவை சேர்ந்தவர்கள் திமுக உடன் இணைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ் பண்ணை வீட்டில் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கட்சியில் சசிகலாவை கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த தீர்மானம் ஓபிஎஸ் இடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் அதிமுகவை சேர்ந்த ராஜாவை ,சசிகலா சந்தித்து பேச உள்ளதாகக் கூறி இருக்கிறார். அந்த வகையில் அதிமுகவினர் சிலருடன் இணைந்து திருச்செந்தூரில் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தியது. அது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. சமீபத்தில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் சசிகலாவை சந்தித்த நிலையில் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக உடன் சென்றவர்களும் நீக்கப்படுவார்கள் அல்லது பன்னீர்செல்வத்தின் தம்பி என்பதால் அவர்களுக்கு சலுகை காட்டப்படுமா என்கிற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் ராஜா உள்ளிட்ட 4 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவு ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து கையெழுத்திட்டுள்ளனர். கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கு கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதன் காரணமாக, கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு கலங்கமும் , அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தேனி மாவட்ட ஆவின் தலைவர் ராஜா, தேனி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகேசன், தேனி மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் வகை கருப்பு ஜி ,கூடலூர் நகர புரட்சித்தலைவர் பேரவை செயலாளர் சேதுபதி உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். ஓபிஎஸ் இபிஎஸ் இந்த அறிவிப்பு தேனி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.