ராதே ஸ்யாம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சத்யராஜ் பேசியுள்ளார்.
பிரபாஸ் நடிப்பில் ராதாகிருஷ்ணன் இயக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது சத்யராஜ் கூறியுள்ளதாவது, நடிகர் பிரபாஸை நாங்கள் டார்லிங் என கூறுவோம். டார்லிங்கின் டார்லிங் பூஜா ஹெக்டே. நான் கடவுள் நம்பிக்கை இன்றி கைரேகை நிபுணராக நடித்திருப்பதாக அனைவரும் கேள்வி கேட்கின்றனர். பெரியார் திரைப்படத்தில் நான் வாழ்ந்துள்ளேன். ஜெர்சி திரைப்படத்தில் நான் கிரிக்கெட் கோச்சாக நடித்து உள்ளேன். அப்படித்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
நான் கதாநாயகனாக நடிக்கும் பொழுது 25 நடிகைகளை திருமணம் செய்து இருக்கின்றேன். அப்ப அதை என்ன சொல்வது. நடிப்பை எப்போதும் நடிப்பாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். இத்திரைப்படமானது ஆழமான காதல் கதையை கொண்டுள்ளது. பிரம்மாண்டமாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபாஸின் அழகுக்காகவே இத்திரைப்படமானது எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் மிகவும் அழகாக உள்ளது. பிரபாஸின் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு முக்கியமான பொறுப்பு இவருக்கு வந்துள்ளது. எல்லா மாநிலங்களிலும் பான் இந்தியா என நடிகர்களை போட்டு எடுக்கின்றார்கள். ஆனால் இத்திரைப்படமுமோ பான் இன்டர்நேஷனல். இது உங்களுக்கு அனைவருக்கும் பிடித்த வண்ணம் இருக்கும் என கூறி விடைபெற்றார் சத்யராஜ்.