தமிழ்நாடு அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக 60 வயது மேற்பட்டோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவை பெண்கள் ஆகியோருக்கு அரசு சார்பாக ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக பெரும்பாலான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த வருடம் நிலவிய கொரோனா பெருந்தொற்று காலத்திலும் இந்த ஓய்வூதிய தொகை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்குக்கு பின் நிலவிய பொருளாதார நெருக்கடியால் விலைவாசி அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் சமூகநல பாதுகாப்பு அமைச்சகம் ஓய்வூதியத் தொகையை உயர்த்தியுள்ளது. அதாவது சமூகநல பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் திருமணமாகாத பெண்கள், விதவை பெண்கள், பாலின சிறுபான்மையினருக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக சுமார் 59.45 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஓய்வூதியமானது பயனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு 600 ரூபாயிலிருந்து 800 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் வருவாய் ஆவணங்கள், வீட்டு வாசலுக்கு திட்டத்தின் கீழ், வருமான, ஜாதி சான்றிதழ்களை விவசாயிகளின் வீடுகளுக்கு சென்று இலவசமாக வழங்கப்படும். ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகும் மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ஓய்வூதியம் 3,000 ரூபாயில் இருந்து 10,000 ஆக ரூபாயாக உயர்த்தப்படும். அதன்பின் விவசாய நிலம் உட்பட மற்ற நிலங்களை சர்வே நடத்த 287 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். 3 வருடங்களில் டிஜிட்டல் முறையில் வரைபடம் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.