Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தந்தையுடன் மொபெட்டில் சென்ற மகள்…. கோர விபத்தில் பறி போன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மொபெட்  மீது பேருந்து மோதிய  விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டிகிணறு கிராமத்தில் பெருமாள்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஷ்வரி என்ற  மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பெருமாள்சாமி தனது மகள்  வெங்கடேஸ்வரியுடன்  ராஜபாளையத்தில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டின் திருமணத்திற்கு  சென்றுவிட்டு மொபட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து திடீரென பெருமாள்சாமியின் மொபெட் மீது பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த வெங்கடேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து பெருமாள்சாமி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த  தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வெங்கடேஸ்வரின்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |