Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

காணாமல் போன நகை…. உரிமையாளர் அளித்த புகார்…. மர்மநபருக்கு வலைவீச்சு….!!

வீடு புகுந்து 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பருவாய் கிராமத்தில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பனியன் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பிரபு கடந்த 27-ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் சென்னை சென்றுள்ளார்.

அதன் பின் சென்னையில் இருந்து திருப்பூருக்கு திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பிரபு அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் அங்கிருந்த லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பிரபு காமநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |