கேபிள் ஒயர் திருடிய 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செவலூர் கிராமத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள கேபிள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 750 அடி கேபிள் ஒயரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஒயரை திருடியது மத்தியசேனை பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி, ஜெயசூர்யா, பெருமாள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து ஒயர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.