Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பற்களை சுத்தமாக வைக்க வேண்டும்” 950 மாணவர்களுக்கு பரிசோதனை…. சிறப்பாக நடைபெற்ற மருத்துவ முகாம்…!!

புனித அற்புத மாதா நடுநிலைப்பள்ளியில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் புனித அற்புத மாதா நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 950 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமினை  மருத்துவர் செந்தில் தலைமை தங்கியுள்ளார்.

இந்த முகாமில் மருத்துவர்கள் விஜயராஜா, ஆனந்தி, செந்தில்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உதவியாளராக சங்கீதா, யமுனா, கௌசல்யா ஆகியோர் இருந்தனர். இவர்கள் மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்தனர். அதன்பிறகு மாணவர்களுக்கு பற்களை தூய்மையாக வைப்பது குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Categories

Tech |