பென்ஷன் தொகையை 1,500 ரூபாயாக உயர்த்ப்படுவதாக இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
2022 – 23 ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் இமாசல பிரதேச மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர் தாக்கல் செய்துள்ளார். அதில் பொதுமக்களுக்கும் ஊழியர்களுக்கும் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் மிக முக்கியமான ஒன்றாக பென்ஷன் தொகை உயர்வு. முதியோருக்கான மாதாந்திர பென்ஷன் தொகை தற்போது நடைமுறையில் உள்ள 1,001 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் பென்ஷன் பெறும் மூத்த குடிமக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மற்றுமொரு சிறப்பு அறிவிப்பாக பென்ஷன் பெறுவதற்கான வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பென்சன் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது தற்போது நடைமுறையில் உள்ள 70 வயதில் இருந்து 60 வரை குறைக்கப்பட்டுள்ளது. பென்சன் பெறுவதற்கு வருமான வரம்பு எதுவும் கிடையாது. நாடு முழுவதும் பென்ஷன் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக உள்ள நிலையில் இமாச்சல பிரதேச மாநில அரசு தனது பட்ஜெட்டில் பென்சன் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்திய அளவிலும் பென்ஷன் தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்த ஆலோசனையில் மத்திய அரசு தற்போது ஈடுபட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு பொருளாதார ஆலோசனைக் குழு பென்சன் தொகை உயர்வு பற்றி பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஊழியர்களுக்கான பணிபுரியும் வயது வரம்பை உயர்த்துவது குறித்தும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.