Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மக்களே…. வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது எப்படி…? வாங்க பார்க்கலாம்….!!!

வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை ஆன்லைன் மூலம் இணைப்பது பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் அரசின் நலத்திட்டங்கள் பெற ஆதார் அவசியமாகும். மேலும் மத்திய அரசு இந்த ஆதார் எண்ணை அனைவரின் வங்கி கணக்கிலும் இணைத்திருக்க வேண்டும் என கட்டாயமாக்கியுள்ளது. ஆனாலும் இன்றும் பல பேர் தங்களது வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்காமல் இருக்கின்றனர்.

எனவே வங்கி கணக்குடன் ஆதார் கார்டை இணைப்பது என்பது எளிமையான காரியம். அவ்வாறு இணைப்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • முதலில் உங்களுக்கு எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அந்த வங்கியின் மொபைல் ஆப்பை லாகின் செய்யவேண்டும்.
  • அதன்பின்  ‘My Account’ வசதியில் சென்று ‘services’ என்பதை கிளிக் செய்யவும். உள்ளே சென்றதும் ’View/Update Aadhar card details’ என்பதை கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்ணை இரண்டு முறை பதிவு செய்து ’submit’ கொடுக்கவும்.
  • உங்களது வங்கி கணக்கில் ஆதார் இணைக்கப்பட்டவுடன் எஸ்எம்எஸ் மூலமாக அதற்கான தகவல் அனுப்பப்படும்.
  • மேலும் இவ்வாறு ஆன்லைனில் மட்டும் இல்லாமல், நேரடியாக வங்கிக்கு சென்றும் ஆதாரை இணைக்கலாம். அதிலும் குறிப்பாக ஏடிஎம் மெஷினிலும் ஆதார்  இணைப்பதற்கான வசதி உள்ளது.

இதை அடுத்து அதிக வங்கி கணக்குகளை ஒருவர் பயன்படுத்துவதால் சில நேரத்தில் புதிய கணக்குடன் ஆதார் எண் இணைக்க மறந்துவிடுவார்கள். இதை போல் பான் கார்டையும், வங்கி கணக்குடன் இணைப்பது மிக அவசியம். மேலும் பான் கார்டையும், ஆதார் கார்டையும் வங்கி கணக்குடன் இணைக்காவிட்டால், வங்கி சேவைகளை பெறுவதில் சில சிக்கல் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |