குப்பை கிடங்கில் திடீரென தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் பெரும் அவதியடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள ஆணிமூர் பகுதியில் நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் குப்பைகள் அங்கேயே கொட்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சம்பவத்தன்று குப்பை கிடங்கில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
மேலும் அந்த நேரத்தில் வேகமாக காற்று வீசியதால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் கரும் புகைசூழ்ந்து தூர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.