சென்னை விமான நிலையத்தில் வித்தியாசமாக நடந்து வந்த ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவரது பாதங்களில் பசை வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
ஷார்ஜாவில் இருந்து சென்னை வந்த அந்த பயணி ரூ.12 லட்சம் மதிப்புள்ள 240 கிராம் தங்க பசையை உள்ளங்கால்களில் ஒட்டி கடத்தி வந்துள்ளார். தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.