மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கந்தர்வகோட்டை பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் வைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கப்பட்டது.
இந்த அடையாள அட்டை பெற வரும் மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த முகாமிற்கு வருவாய் கோட்டாட்சியர் கருணாகரன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் வட்டாட்சியர் புவியரசன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சிவக்குமார் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.