Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மகளை கண்டித்த பெற்றோர்…. மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலூர் தெற்கு காலனி பகுதியில் கூலித் தொழிலாளியான இசக்கி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கயல்விழி என்ற 7-ஆம்  வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கயல்விழி சரியாக படிக்காததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கயல்விழி உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீ குளித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த கயல்விழியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கயல்விழி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |