Categories
தேசிய செய்திகள்

“உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பியோர் எண்ணிக்கை…..!!” வெளியுறவுத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய இந்தியர்களின் எண்ணிக்கை 13300 என வெளியுறவு துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியிருப்பதாவது, “உக்ரைனில் உள்ள கார்கில் நகரில் சிக்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டனர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2900 இந்தியர்கள் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

அடுத்த 24 மணி நேரத்தில் சுமார் 13 விமானங்களின் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை நீக்கப்பட உள்ளனர். அதோடு சுமி நகரில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க சற்று தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அந்த பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெறுவதால் மீட்பு பணியில் சிக்கல் நிலவி வருகிறது.”

Categories

Tech |