இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இதனால் பெண் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக பள்ளிகளிலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறும் சம்பவங்கள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில் உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்பூரில் தனியார் பள்ளியில் மூன்றாவது படிக்கும் 9 வயது சிறுமியை பள்ளியின் முதல்வர்(71 வயது) பாலியல் கொடுமை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தன்று மாணவியை பள்ளி முதல்வர் ஏதோ ஒரு காரணம் சொல்லி தனது அறைக்கு அழைத்து பின் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவருக்கு மற்ற ஆசிரியர் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.