Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“நான் தோற்றுப் போவதில்லை”… இன்ஸ்டாவில் பதிவிட்ட புகழ்… யாருக்கு இந்த பதிலடி…???

நான் தோற்றுப் போவதில்லை. ஒன்று வெற்றி கொள்கின்றேன், இல்லை கற்றுக்கொள்கின்றேன் என இன்ஸ்டாவில் பதிவிட்ட புகழ்.

புகழ் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார். இதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. இவர் சந்தானம் மற்றும் அஜித்துடன் இணைந்து படங்களில் நடித்து வருவதாக கூறப்பட்டது. அண்மையில் வெளிவந்த வலிமை திரைப்படத்தில் புகழின் காட்சிகள் சில நிமிடங்களே இருந்தன. இதனால் இந்த சிறிய ரோலுக்கா இவ்வளவு பில்டப் பண்ணப்பட்டது என விமர்சனம் எழுந்தது. இதனைத்தொடர்ந்து புகழ் மீண்டும் குக் வித்து கோமாளி நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இதனால் பட வாய்ப்புகள் குறைந்ததால் தான் மீண்டும் நிகழ்ச்சிக்கு சென்று விட்டீர்களா? என்ற விமர்சனம் எழுந்தது.

https://www.instagram.com/p/CardIiiP0rL/?utm_source=ig_web_button_share_sheet

இந்நிலையில் புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் எதிலும் தோற்றுப் போவதில்லை..! ஒன்று வெற்றி கொள்கின்றேன் இல்லை கற்றுக் கொள்கின்றேன்.! என பதிவிட்டுள்ளார். தன்னை விமர்சிப்பவர்களுக்காகத்தான் இப்படி பதிவிட்டுள்ளாரா? என்ற கேள்வி எழுகின்றது.

Categories

Tech |