Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதையடுத்து பல மாதங்களுக்குப் பிறகு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பின்னர் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் 10, 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடக்கும் என்று அறிவித்திருந்தனர்.

அதற்கான வேலைகளும் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் பொதுத் தேர்வுக்கான தேதிகளை பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். அதன்படி மே 5-ஆம் தேதி தொடங்கும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 28ஆம் தேதி முடியும் என்றும், ஏப்ரல் 25-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை அதற்கான செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 10-ஆம் தேதி அன்று தொடங்கி மே 30-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 9-ஆம் தேதி தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதேபோல் இந்தத் தேர்வு முடிவுகள் 10-ஆம் வகுப்புக்கு ஜூன் 17ஆம் தேதியும், 11-ஆம் வகுப்புக்கு ஜூலை 7ஆம் தேதியும், 12-ஆம் வகுப்புக்கு ஜூன் 23ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில் 6 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கு தற்போது ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதிகளையும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 13-ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

Categories

Tech |