சூப்பர் சிங்கர் ஜூனியரில் இனி பிரியங்கா இல்லை மைனா தான் தொகுப்பாளர் என செய்தி வெளியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் ஜூனியர். இது மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிகழ்ச்சியிலிருந்து பிரியங்கா பிக்பாக்ஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால் மைனா தொகுப்பாளராக இருந்தார். பின்னர் பிரியங்கா பிக்பாஸில் இருந்து வெளியேறியதால் மீண்டும் தொகுப்பாளர் ஆனார்.
பிறகு ப்ரியங்கா மீண்டும் தனது பிக்பாஸ் நண்பர்களுடன் இணைந்து சுற்றுலா சென்றுவிட்டார். இதனால் மீண்டும் மைனாவே தொகுப்பாளர் ஆனார். இந்நிலையில் இனி சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் முழுவதும் மாகாபா மற்றும் மைனா தான் தொகுப்பாளராக பணியாற்ற உள்ளதாக தகவல் வெளிவந்திருக்கின்றது.