உக்ரைன் போர் விவகாரம் தொடர்புடைய பேச்சு வார்த்தையை தாமதப்படுத்துவதற்கான சாக்கு போக்குகளை தொடர்ந்து முன்வைக்கிறது என்று ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க போரை கைவிட்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐநா பொது சபை உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளது. அதன்படி 2 நாடுகளும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. இதில் போர் நிறுத்தத்திற்கான எந்தவித உடன்பாடும் எட்டவில்லை என்பதால் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை என்று இது தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களுக்கு ரஷ்யாவின் வெளியுறவு மந்திரி செர்ஜி பதில் அளித்துள்ளார. மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, உக்ரேன் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதற்கான சாக்கு போக்குகளை தொடர்ந்து முன்வைக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.