Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

இதன் மகத்துவம் தெரிந்தால்… எங்கு பார்த்தாலும் விடவே மாட்டீங்க..!!

நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருட்களில் பனங்கிழங்குக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஒரு சிலர்தான் இன்றும் உணவில் தவறாமல் சேர்த்து வருகின்றனர். அதன் பெருமைகளை எல்லோரும் முழுமையாகப் புரிந்துகொண்டால் எங்கு பார்த்தாலும் பனங்கிழங்கை விடவே மாட்டார்கள்’’ 
  • ‘‘பனங்கிழங்கு சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. இதனைப் பல வழிகளில் உணவாக பயன்படுத்தலாம்.
  • பனங்கிழங்கு உடலுக்குப் பொலிவைத் தந்து அழகைக் கூட்டும்.
  • இது ரத்த புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தி, தீவிரம் அடையாமல் தடுக்கும் ஆற்றல் பனங்கிழங்குக்கு உண்டு.
  • இதில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது. பெருங்குடலில் நச்சுத்தன்மை உள்ள பொருட்கள் சேர்வதைக் கட்டுப்படுத்தி, கழிவுகளை முழுமையாக வெளியேற்றுகிறது. இதனால், பெருங்குடலில் உண்டாகிற புற்றுநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
  • இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் உடல் வலிமை, மூளை வளர்ச்சி, எலும்புகளை பலம் பெறச் செய்தல் ஆகியவற்றுக்குத் துணை செய்கிறது. சி வைட்டமின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்து, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது.
  • பசியை கட்டுப்படுத்துகிற திறன் உண்டு என்பதாலும், கொழுப்பு சத்து இல்லாத கிழங்கு என்கிற காரணத்தாலும் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
  • உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து, வாய், வயிறு ஆகிய உறுப்புகளில் ஏற்படுகிற புண்களையும் குணப்படுத்துகிறது.
  • இதுபோல் எண்ணற்ற மருத்துவ குணம் கொண்டது என்பதற்காக, அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடக்கூடாது. ஏனென்றால், வயிற்றுவலி, சொறிசிரங்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

Categories

Tech |