உக்ரைன் மீதான ரஷ்யாவின் நியாயமற்ற சட்டவிரோத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் ஏவுகணை விச்சு, வான் மற்றும் தரைவழித் தாக்குதல் போன்றவற்றை நடத்தி வருகிறது.
இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷ்யாவின் உக்ரைன் மீதான சட்ட விரோத மற்றும் நியாயமற்ற தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது ரஷ்யாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் இணைய தாக்குதலுக்கு எதிராக தாங்கள் செயல்பட்டு வருவதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.