முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகிறார். இவர் நாகர்கோவில் மாநகராட்சியில் நடைபெறும் சாலை பணிகளை பார்வையிடுவதற்காகவும்,வெள்ள சேத சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் நாளை கன்னியாகுமரிக்கு வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு அவர் தங்கியிருக்கும் அரசினர் விருந்தினர் மாளிகைகள் பாதுகாப்பு பணிகள் ஒழுங்கான முறையில் இருக்கிறதா என்பதை தென்மண்டல காவல் ஆய்வாளர் ஜி ஜி அன்பு ஆய்வு செய்துள்ளார்.
மேலும் முதலமைச்சர் வருகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் முதலமைச்சர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து மற்ற காவலர்களுக்கு ஆலோசனை கூறினார். இதனையடுத்து முதலமைச்சர் கன்னியாகுமரிக்கு வந்த பிறகு அரசினர் விருந்தினர் மாளிகையில் மதிய உணவு உண்பார். அதன்பிறகு பேயன்குழி பகுதியில் நடைபெறும் சாலை பராமரிப்பு பணிகள் மற்றும் குமாரகோவில் பகுதியில் நடைபெறும் வெள்ள சேத பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்வார். இதன்பிறகு மாலை நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு சென்று பின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செல்கிறார்.