டெம்போ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருங்கோடு பகுதியில் இருக்கும் பாலபள்ளத்தில் அருண் சஞ்சு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நடைக்காவு பகுதிக்கு சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த டெம்போ அருண் சஞ்சுவின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அருண் சஞ்சீவ் படுகாயமடைந்தார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அருண் சஞ்சு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கொல்லங்கோடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அருண் சஞ்சுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.