ரஷ்யா உக்ரேன் போருக்கு மத்தியில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஷ் அடுத்த 2 வாரத்திற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24 ஆம் தேதி போர்தொடுக்க ஆரம்பித்துள்ளது. அவ்வாறு தொடுக்கப்பட்ட போர் தொடர்ந்து நேற்றோடு 10 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போர் விவகாரத்தில் அமெரிக்கா ரஸ்யாவிற்க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அது மட்டுமின்றி அமெரிக்கா ரஷ்யாவிற்கு எதிராக உலக நாடுகளை அணிதிரட்டுவதில் முனைப்பு காட்டி வருகிறது. மேலும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களை உக்ரேனை ஆக்கிரமிப்புக்கு ரஷ்யாவிற்கு எதிராக ஒருங்கிணைக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹரிஷ் அடுத்த 2 வாரத்திற்கு போலந்து மற்றும் ருமேனியா ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது இரு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பில் கமலா ஹரிஷ் ரஸ்யாவின் இந்த நியாயமற்ற தாக்குதலுக்கு பதிலளிக்க அவர் நியாயமான ஒருங்கிணைப்பை முன்னெப்பார் என்று அமெரிக்காவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.