Categories
உலக செய்திகள்

இந்த ஆண்டும் “பிரபல நாடு கிரே பட்டியல்” தான்…. எதுக்குன்னு தெரியுமா…? இதோ வெளியான தகவல்….!!

ஐ.நாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்த அம்சத்தை பாகிஸ்தான் நிறைவேற்றாததால் நடப்பாண்டிலும் அந்நாடு கிரே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக எப்.ஏ.டி.எப் தெரிவித்துள்ளது.

உலகெங்கிலுமுள்ள பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதற்கான கண்காணிப்பு பணிகளை பாரிசை தலைமையிடமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த குழு பல நாடுகளில் இது தொடர்பான ஆய்வுகளை நடத்தி அதற்கேற்ப அவைகளை வகைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு இந்த அமைப்பு பயங்கரவாத செயல்களுக்கு நிதி செல்வதை நடக்காததால் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்துள்ளது. இதற்கு எதிரான நடவடிக்கை எடுக்கும் வகையில் செயல்திட்டம் கொடுத்தும் கூட பாகிஸ்தான் அதனை நிறைவேற்றாததால் இந்த ஆண்டும் அந்நாடு கிரே பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக எப்.ஏ.டி.எப் அமைப்பு தெரிவித்துள்ளது.

Categories

Tech |