மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், மாளவிகா மோகனன், நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், ஸ்ரீமன் என பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை தொடர்ந்து விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்திலிருந்து அண்மையில் வெளியான அரபிக் குத்து பாடல் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து விஜய் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை குறித்து ரசிகர்கள் பேச ஆரம்பித்து விட்டனர். விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. கமல் நடிக்கும் விக்ரம் படத்தை லோகேஷ் இயக்குகின்றார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கின்றது. இந்நிலையில் விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.