Categories
மாநில செய்திகள்

வில்சனின் குடும்பத்திற்கு ரூ 1,00,00,000 வழங்கப்படும் – முதல்வர் பழனிசாமி.!

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த எட்டாம் தேதியன்று இரவு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை அங்கு வந்த இரண்டு நபர்கள், கைத்துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்திவிட்டும் தப்பிச் சென்றனர்.

இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே சட்டப்பேரவையில் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசு பணி வழங்கப்படும் என்றும்தான் குறிப்பட்டிருந்ததை நினைவுகூறியுள்ள அவர், சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உயரிய தியாகத்தைக் கருத்தில்கொண்டு அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒரு கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |