அதிவிரைவாக இயக்கப்பட்ட 44 ஆண்டு கால சாதனையை வைகை எக்ஸ்பிரஸ் முறியடித்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை, சென்னை, எழும்பூர் இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் 6 மணி 40 நிமிடத்தில் 497 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனால் இனி மதுரை, சென்னை இடையேயான பயண நேரம் குறையும் என பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரை , சென்னை , எழும்பூர் இடையே ஒரு நாளைக்கு சுமார் 15 ரயில்கள் இயக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக வகை திருக்குறள், பாண்டியன் ,பொதிகை, நெல்லை, முத்துநகர், விரைவு ரயில்கள் மூலம் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர்.
மதுரை, சென்னை, எழும்பூர் இடையே யான வைகை விரைவு ரயில் சேவை 15/08/1997 ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. வைகை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 12636 தினந்தோறும் காலை 7 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல் திருச்சி விழுப்புரம் செங்கல்பட்டு மதியம் 2 40 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடையும். வழக்கமாக 7 மணி 15 நிமிடங்களில் வைகை எக்ஸ்பிரஸ் மதுரை சென்னை ,எழும்பூர் இடையேயான 497 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கும். ஆனால் கடந்த 3ஆம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக 20 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு போதிலும் ஆறு மணி 40 நிமிடங்களில் எழும்பூரை சென்று சேர்ந்துள்ளது.
இதனால் அதிவிரைவாக இயக்கப்பட்ட 44 ஆண்டுகால சாதனையை வைகை எக்ஸ்பிரஸ் முறியடித்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் மதுரை, எழும்பூர் இடையே சோழவந்தான், திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம், விழுப்புரம் ,செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட 9 ரயில் நிலையங்களில் நின்று சென்றுள்ளது. இனிவரும் காலங்களிலும் இதேபோல ரயில் இயக்கப்படும் பட்சத்தில் பயண நேரம் குறையும் என பொது மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.