Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடங்கள்…. ஆக்கிரமிக்கும் தனி நபர்கள்…. மீட்பு பணியில் கோவில் நிர்வாகம்…!!

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான பல இடங்கள், நஞ்சை, புஞ்சை நிலங்கள்  ஆகியவை தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது என தகவல் வந்தது. இந்த இடங்களை மீட்கும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டது தெரியவந்தது. எனவே தாளக்குடி‌ பகுதியில் இருக்கும் திருக்கோயிலுக்கு சொந்தமான அந்த இடத்தை திருக்கோவிலின் இணை ஆணையர் குமாரவேல் தலைமையில் ஒரு குழு சென்று பார்வையிட்டது.

அதன்பிறகு அந்த இடத்தில் இது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும் இந்த இடத்தை பொது பயன்பாட்டிற்கு ஏலம் விட கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து கோவிலுக்கு சொந்தமான இடங்களை யாரேனும் ஆக்கிரமித்து வைத்திருந்தால்  உடனடியாக கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், கோவில் நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய வாடகை பணத்தையும் செலுத்த வேண்டும் எனவும் இணை ஆணையர் குமரதுரை கூறியுள்ளார்.

Categories

Tech |