Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமி…. 401-வது பட்டாபிஷேக விழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமியின் 401-வது பட்டாபிஷக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரிமளம் பகுதியிலுள்ள சிவபுரத்தில் மிருத்திகா பிருந்தாவனம் அமைந்துள்ளது. இந்த பிருந்தாவனத்தில் புகழ்பெற்ற ராகவேந்திர சுவாமி‌ சன்னிதானம் அமைந்துள்ளது. இங்கு சுவாமிக்கு 401-வது  பட்டாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் போன்ற பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பிறகு அன்னதானம் நடைபெற்றது. மேலும் சுவாமிக்கு அவதாரத் திருநாள் வருகிற 9-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெறும் என பிருந்தாவன நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |