ரஷியாவுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும் சமரச பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்கிடையில் இருநாடுகளும் கடந்த மாதம் 28ஆம் தேதி மற்றும் கடந்த 3ஆம் தேதி என இரு நாட்களில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை அன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் உக்ரைன் அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கீவில் உள்ள கோர்ட்டில் குண்டு காயங்களுடன்அதிகாரி டெனிஸ் கிரீவின் உடல் கண்எடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை உக்ரைன் பத்திரிக்கையாளர் இணையதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அதிகாரி டெனிஸ் கிரீவை கொலை செய்தது யார்? என்பது குறித்தும் எந்த சூழலில் அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை.