தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 1997 இன் படி அங்கீகரித்துள்ள மருத்துவ முறையிலான நிறுவனங்கள் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ நல பணி இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தவும், மருத்துவமனை பற்றிய முழுமையான விவரங்கள் மற்றும் அளிக்கப்படும் சிகிச்சையின் தரம் போன்றவற்றை நிர்ணயிக்க மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திருத்த சட்டம் உள்ளது.
அதன்படி அரசிடம் அனைத்து மருத்துவ நிறுவனங்களும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் பதிவு செய்யாத மருத்துவ நிறுவனங்கள் சட்டவிரோதமாக கருதப்பட்டு, அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதற்கு www. tnhealth. co. in என்ற இணைய தளத்தில் சென்று அரசு மற்றும் தனியார் மருத்துவ நிபுணர்கள் பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.