ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில், ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு எதிராக பேரணியாக மக்கள் சென்றிருக்கிறார்கள்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 11 வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, தீவிரமாக போர் தொடுத்து வருகிறது. எனவே, ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடையை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று பேரணி நடத்தினர். அவர்கள், “போரை நிறுத்த வேண்டும்” ,”உயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்” “நாங்கள் உக்ரைனை ஆதரிக்கிறோம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர்.