Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வர்களே!…. தேர்வு தேதி, நேர மாற்றம்…. இதோ முழு விபரம்…..!!!!!!

தமிழகத்தில் குரூப்-2, 2ஏ தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி வெளியானது. இத்தேர்வு இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர், வணிகம், மருத்துவம், கிராமப்புற சுகாதார சேவை பிரிவு, வணிக வரி அதிகாரி, நகராட்சி ஆணையர், கூட்டுறவு சங்கங்க ஆய்வாளர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஸ்டெனோ-டைப்பிஸ்ட், நுகர்வோர் ஊரக வளர்ச்சி துறை, நன்னடத்தை அதிகாரி, தணிக்கை ஆய்வாளர், உதவி ஜெயிலர் உள்ளிட்ட 33-க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு குரூப்2, 2ஏ ஆகிய போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு மேற்கண்ட பதவிகளுக்கான இந்த குரூப் 2, 2ஏ 2022 மே 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கடந்த 23ஆம் தேதி முதல் விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. ஆகவே மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லால் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குரூப்-2 தேர்வு முதல் நிலை, முதன்மை நிலை, நேர்முகத் தேர்வு என்று 3 கட்டங்களை கொண்டது.

நடப்பாண்டு முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதில் 40 சதவீதம் மதிப்பெண்கள் பெறுவது கட்டாயமாகும். அதுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தேர்வு நிரந்தர கணக்கு வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்வின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு இனி 9 மணிக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குரூப் 2, 2-ஏ தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

Categories

Tech |